WhatsApp Image 2024 08 22 at 22.38.28

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளமானது மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவால் வடிவமைப்பு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் தலைமையில் 22.08.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புதிய மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் உதவி மாவட்ட செயலாளர் திரு.கு.பிரணவன் அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ந.முகுந்தன், மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.க.லக்சிகா, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.தி.மதிராஜ் என பலரும் கலந்து கொண்டனர்.  

இதன்போது மாவட்ட சிறுவர் சபையினால் மாதாந்தம் வெளியிடப்படவுள்ள "துளிர்" செய்திமடலின் முதல் வெளியீட்டின் முதல் பிரதி மாவட்ட சிறுவர் சபை பிரதிநிதிகளினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய அதிதிகளுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு மாவட்ட சிறுவர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபையின்  தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கும் இன்றைய தினத்தில் மாவட்ட செயலகத்தில் "நெறிமுறையுடன் கூடிய ஊடக செய்தி அறிக்கையிடல்" எனும் தொனிப்பொருளில் வெளியிட்டு வைக்கப்பட்ட  மாதாந்த செய்தி மடலுக்கான செய்திகளை தயாரிப்பதற்காக முழு நாள் பயிற்சி நெறியானது சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய திரு உ.உதயகாந்த் அவர்களினால்  நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 08 22 at 22.38.32 WhatsApp Image 2024 08 22 at 22.38.28 WhatsApp Image 2024 08 22 at 22.38.29 1 WhatsApp Image 2024 08 22 at 22.38.29

WhatsApp Image 2024 08 22 at 22.38.34 WhatsApp Image 2024 08 22 at 22.38.27 WhatsApp Image 2024 08 22 at 22.38.40 WhatsApp Image 2024 08 22 at 22.38.41