WhatsApp Image 2024 08 06 at 10.08.08

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து செப்டம்பர் 06 ம் திகதி வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்  அசையும் அசையாச் சொத்துகளின் முறைகேடான பாவனை தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் , அரச அலுவலர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பாக மூன்று முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம், பதவி உயர்வு, பரீட்சை நடாத்துதல், மற்றும் சேவை நீடிப்பு போன்றவை தொடர்பாக  ஏழு  முறைப்பாடுகளும், சட்டவிரோத சுவரொட்டிகள், பாதாதைகள் காட்சிப்படுத்தல்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் தொடர்பாக பத்து முறைப்பாடுகளும், பொருட்கள் விதியோகித்தல், அன்பளிப்பு வழங்குதல், திறப்பு விழா நடாத்தல் ,காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக ஏழு முறைப்பாடும்   சட்ட விரோத கூட்டங்கள், தேர்தல் தொடர்பான ஊர்வலம் மற்றும் சட்டவிரோத அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பாக இரு முறைப்பாடும்,  மேலும் வேறுவகை முறைப்பாடுகள் ஒன்றும் என மொத்தம் 36 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிமீறல் அடிப்படையில் சாதாரணதரமுடையவை எனவும், இதுதொடர்பாக இருபத்தைந்து முறைப்பாடுகள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளது.