WhatsApp Image 2024 09 09 at 10.24.22

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்  கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் சந்தித்து விசேட  கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

 

இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களால் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வீதிமிறல்கள், தேர்தல் களநிலவரங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இதுவரை மாவட்டத்தில் பாரிய தேர்தல்கள்  வீதிமீறல்கள் இடம்பெறவில்லை என்பதுடன் சிறிய நடுத்தரத்திலான மீறல் இடம் பெற்றுள்ளதாகவுவும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் இதன்போது குறித்த குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும்  முன்னாயத்த நடவடிக்கைகள்  தொடர்பாக இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின்  தேர்தல் கண்காணிப்பு குழுவின் நீண்ட கால மேற்பார்வையாளரான சிசிலியா கீவேனி கருத்து தெரிவிக்கையில், இம்முறையுடன் இலங்கையில் தாம் 7 தடவைகள் தேர்தல்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தேர்தல்கள் விதிமீறல்களை தலைமை காரியாலத்திற்கு அறிக்கையிட்டு வருவதாக தெரிவித்ததுடன், பழைய மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வினையும் குறித்த குழுவினர் கண்காணிப்பு மேற்கொண்டனர்.

WhatsApp Image 2024 09 09 at 10.24.23 WhatsApp Image 2024 09 09 at 10.24.23 1 WhatsApp Image 2024 09 09 at 10.24.24