
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் கடமையாற்றவுள்ள வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 19.09.2024 அன்று இடம்பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் வெளிமாவட்டத்தில் இருந்து தேர்தல்கள் கடமைகளை மேற்கொள்ளவுள்ள வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது. இதன் போது வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.







