WhatsApp Image 2024 09 20 at 14.23.41 2

நாளை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை எனவும் மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதிமீறல் சம்பவங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்  மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக 20.09.2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்  தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜெஸ்டினா முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

நாளை காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

WhatsApp Image 2024 09 20 at 14.23.41 2 WhatsApp Image 2024 09 20 at 14.40.22