WhatsApp Image 2024 10 01 at 19.20.54

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மாவட்ட முகாமையாளர் கீர்த்தசாகர தலைமையில் பிரதேச அபிவிருத்தி வங்கி வளாகத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது தரம் ஐந்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், கல்வி பொது சாதாரண பரீட்சை, மற்றும் உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு வங்கியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை  ஊக்குவிப்பதற்கு பழகி கொள்ள வேண்டும் என அதிதிகள் இதன் போது கருத்து தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு கிளைகளினுடாக பிரதேச அபிவிருத்தி வங்கி சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 10 01 at 19.18.57 WhatsApp Image 2024 10 01 at 19.20.54 WhatsApp Image 2024 10 01 at 19.20.54 1 WhatsApp Image 2024 10 01 at 19.20.55