WhatsApp Image 2024 10 03 at 15.47.55 1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு நிலை  மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரியா விடை நிகழ்வு 03.10.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள், கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்பரன், மாவட்ட காணி பிரிவில் கடமையாற்றி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாவட்ட மேலதிக பதிவாளராக பதவியேற்று சென்றுள்ள பீ.நிருபா உள்ளிட்ட மூவருக்கும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டு, ஏற்புரையினை தொடர்ந்து மூவருக்கும் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து பரிசில்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷனி ஶ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 10 03 at 15.47.55 1 WhatsApp Image 2024 10 03 at 15.48.00 1 WhatsApp Image 2024 10 03 at 15.48.00 WhatsApp Image 2024 10 03 at 15.47.58 1

WhatsApp Image 2024 10 03 at 15.47.58 WhatsApp Image 2024 10 03 at 15.47.56 WhatsApp Image 2024 10 03 at 15.47.57 WhatsApp Image 2024 10 03 at 15.48.05