
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் நெறிப்படுத்தலில் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் இ.புவனேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.10.2024 அன்று நடைபெற்றது.
மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைத்து மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அனுபவ பகிர்வு இடம் பெற்றது. இதன்போது சந்தைப்படுத்தல் முறைமையை விரிவாக்கம் செய்தல் மற்றும் விற்பனைகளை அதிகரிப்பதற்கான நுணுக்கங்கள் தொடர்பாக தொழில் மேம்பாட்டு உத்தியோகத்தர் நாகேந்திரன் கோகுலதாசினால் தெளிவூட்டப்பட்டது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்றால் போல் தூர பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பொதி முறை மூலம் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை அஞ்சல் திணைக்கள சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஜமுனா புவனேந்திரன் அவர்களினால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களது அனுபவப்பகிர்வும், அவர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறிய நடுத்தர முயற்ச்சியாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.







