WhatsApp Image 2024 10 09 at 15.57.19

கிழக்கு மாகாண ஆளுநர்  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை 09.10.2024 அன்று மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை  சந்தித்து கலந்துரையாடினார்.

 

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண  பிரதம செயலாளர் ஆர்.எம். பி.எஸ். ரத்நாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 10 09 at 15.57.19 WhatsApp Image 2024 10 09 at 15.57.07 WhatsApp Image 2024 10 09 at 15.57.18