WhatsApp Image 2024 10 22 at 15.22.41 1

மட்டக்களப்பில் அஞ்சல் வாக்குகளை பொதியிடும்  உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அவர்களுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.10.2024 அன்று  இடம்பெற்றது.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களின்   தபால்மூல வாக்களிப்புக்களை  பொதியிடும்  உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. இதன் போதுஅஞ்சல் வாக்குகளை விரைவாக பொதியிட வேண்டும் என உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு  மற்றும் அவர்களுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை மற்றும் தெளிவவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான், மற்றும்  உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 10 22 at 15.22.41 1 WhatsApp Image 2024 10 22 at 15.22.34 WhatsApp Image 2024 10 22 at 15.22.39 WhatsApp Image 2024 10 22 at 15.22.40

WhatsApp Image 2024 10 22 at 15.22.44 WhatsApp Image 2024 10 22 at 15.22.46