WhatsApp Image 2024 10 29 at 14.23.11

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.10.2024 அன்று இடம்பெற்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.

WhatsApp Image 2024 10 29 at 14.23.11 1 WhatsApp Image 2024 10 29 at 14.23.12 WhatsApp Image 2024 10 29 at 14.23.13 WhatsApp Image 2024 10 29 at 14.23.13 1