WhatsApp Image 2024 11 22 at 17.21.36 1

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழில் அபிவிருத்தி நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் கெவில்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் ஆகியோரினால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

 

காவியா சுயதொழில் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி அஜித் யோகமலரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கெவில்டாஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் காவியா சுயதொழில் அபிவிருத்தி சங்கம் மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவு இளைஞர் அபிவிருத்தி சங்கம் இணைந்து மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தி சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குவதற்கு இந் நிலையம் செயற்படவுள்ளது.

மாவட்டத்தில் 52 சுயதொழில் உற்பத்தி குழுக்களை அமைத்து தொழில் முயற்சி உதவிகளை காவியா பெண்கள் அமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் சுய தொழில் உற்பத்தி பொருட்கள்  உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும்  விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றது இதனை தீர்த்து வைப்பதற்கான நிலையமாக செயற்படவுள்ளது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் நிஷாந்தினிஅருள்மொழி, கெவிடாஸ் நிறுவன திட்ட முகாமையாளர் ரஞ்சித் விஜகோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 11 22 at 17.21.36 1 WhatsApp Image 2024 11 22 at 17.21.38 WhatsApp Image 2024 11 22 at 17.21.36 WhatsApp Image 2024 11 22 at 17.21.34

WhatsApp Image 2024 11 22 at 17.21.35 WhatsApp Image 2024 11 22 at 17.21.33