ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் உளரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களை ஆற்றுப்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பரிந்துரைக்கமைய ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உதவி திட்டத்தில் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள் 16.09.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டன.

அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஆலோசனையில் மட்டக்களப்பு உளநல சமூக ஒன்றியம் பாதிக்கப்பட்ட சிறார்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து செய்த ஆற்றுப்படுத்துதல் திட்டத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த உதவிப் பொருட்களை அரசாங்க அதிபர் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மனநல ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.பாமினி அச்சுதன், மாவட்ட உளவள துணை அதிகாரி திரு.கே.மதிவண் ணன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.வீ.குகதாசன் உட்பட பல அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட சிறார்களுடன் பெற்றோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இங்கு பாதிக்கப்பட்ட சிறார்கள் 75 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அரச அதிபர் இங்கு கருத்து வெளியிடுகையில் குண்டு வெடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மன அழுத்தத்துக்குள்ளான மக்களை ஆற்றுப்படுத்த அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி பாராட்டியதுடன், இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் மனிதத்துவம் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட சிறார்களின் நலன் கருதி மேலும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

2469001224690013246900142469002624690017