WhatsApp Image 2024 12 23 at 12.34.05

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலகத்தில் அமையப்பெற்றுள்ள இலங்கை வங்கியின் கிளை 23.12.2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் தாட்சாயினி பவான் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா யுலேகா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வங்கியினை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக இலங்கை வங்கியின் கிழக்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் குமுது மஹாவத்த, கிழக்கு பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் ரசிக விஜயரத்தின, மாவட்ட முகாமையாளர் என். பிரதீபன் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். பழைய மாவட்ட செயலகத்தில் இயங்கி வந்த இலங்கை வங்கிக் கிளையே புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வங்கிக்கிளையில் தனி நபர் வங்கிச் சேவை, தங்க கடன் அடகுச் சேவை மற்றும் காசாளர் கரும பீடம் என்பன இடம் பெறவுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் ATM இயந்திரம் பொருத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 12 23 at 12.34.05 WhatsApp Image 2024 12 23 at 12.34.05 1 WhatsApp Image 2024 12 23 at 12.34.06 WhatsApp Image 2024 12 23 at 12.34.08

WhatsApp Image 2024 12 23 at 12.34.09 WhatsApp Image 2024 12 23 at 12.34.10 WhatsApp Image 2024 12 23 at 12.34.10 1 WhatsApp Image 2024 12 23 at 16.48.40