
இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து "அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 750 உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலத்திற்கு வந்தடைந்துள்ளன.
இப்பெறுமதியான உலர் உணவு திகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.இந்நிகழ்வில் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், கணக்காளர் எம் வினோத் மற்றும் பலர் கலந்து கொன்டனர்.






