
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக அவர்களினால் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை வேலைத்திட்டம் 17.01.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பொதுமக்கள் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகாமையில் கமுகு மரங்கள் நடப்பட்டன.
மேலும் மாவட்ட செயலக வளாகத்தினை அழகுபடுத்தி சுத்தமாக வைத்திருப்பதற்கும், சேவை நாடிவரும் பொதுமக்கள் தமது தேவைகளை அசௌகரிகமின்றி துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்குமான நடவடிக்கைகள் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வீ. ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







