
மட்டக்களப்பில் ஆயிரம் பூக்களை (சுவாகாஸ்) நடுவோம் சங்கத்தின் இருநாள் விற்பனை கண்காட்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 27.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. பேராதனை தேசிய தாவரவியல் திணைக்களத்தின் நிதிஅனுசரணையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டமானது மட்டக்களப்பு பாடுமீன்கள் சுவாகாஸ் அழகு தாவர பூக்கள் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் வி. சுதாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அழகு தாவரங்களை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உற்பத்திகளை விற்பனை செய்வதற்குமான சந்தை வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இதன்போது அழகு தாவரங்களை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கிழக்கு மாகாண பூங்கா அபிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.கார்த்திகாவினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப். சனீர், தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின் மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் க.மதிவண்ணன் மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன் பல உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






