WhatsApp Image 2025 01 28 at 12.43.13

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.01.2025 அன்று இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபிட்சமாக எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து சிறார்களை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. கர்ப்பிணி தாய்மார்களுக்கான  போஷாக்கு உணவு வழங்கல் , சிறார்களுக்கானஉணவு  வழங்கல், குருஅபிமணி வேலைத்திட்டங்கள், பாடசாலை இடை விலகல், இளவயது திருமணம், சிறார்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முற்தடுப்பு  வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டது.

சிறார்களை மேம்படுத்துவதற்கும்  பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டது. சிறார்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை  சமூகமாக கையாள்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி ரிஸ்வானி  றிபாஸ், உதவி பிரதேச செயலாளர்கள்,முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட   இணைப்பாளர் முரளிதரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ்,  அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 01 28 at 12.43.13 WhatsApp Image 2025 01 28 at 12.43.14 WhatsApp Image 2025 01 28 at 12.43.05 WhatsApp Image 2025 01 28 at 12.43.05 1

WhatsApp Image 2025 01 28 at 12.43.09 WhatsApp Image 2025 01 28 at 12.43.11

WhatsApp Image 2025 01 28 at 12.43.11 1