WhatsApp Image 2025 01 31 at 17.28.46 1

மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான பிரதான  பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி மிகவும் கோலாகலமாக மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. திராய்மடு ஸ்ரீ முருகன்  ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாரம்பரிய கலாசார பவனியில் மாட்டு வண்டியில் பாரம்பரிய முறைப்படி பூசைப் பொருட்கள், அறுவடை செய்த நெல் என்பன மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி நெல் குற்றி பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சுதர்ஷினி  அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் தமிழர் பாரம்பரிய தைப்பொங்கலை எடுத்து கூறும் மாட்டு வண்டி பவனி நாட்டுப்புற நடனங்கள், கூத்து என்பன இடம்பெற்றன. இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலக உத்தியோகத்தர்களினாலும் தனித்தனியாக 14 வகையான பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டதுடன், பொங்கல் பிரசாதம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.மாவட்டசெயலகத்தின் ஒருங்கிணைப்பில்  இடம்பெற்ற பொங்கல் விழாவிற்கு மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகம் அனுசரனை வழங்கியிருந்ததுடன் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இதன்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), பிரதம கணக்காளர் திருமதி.ஆர்.காயத்திரி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்த்தனன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன்,மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் வீ.நவநீதன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

WhatsApp Image 2025 01 31 at 17.28.40 WhatsApp Image 2025 01 31 at 17.28.39 1 WhatsApp Image 2025 01 31 at 17.28.39 WhatsApp Image 2025 01 31 at 17.28.38 1

WhatsApp Image 2025 01 31 at 17.28.38 WhatsApp Image 2025 01 31 at 17.28.37 WhatsApp Image 2025 01 31 at 17.28.36 WhatsApp Image 2025 01 31 at 17.28.37 1

WhatsApp Image 2025 01 31 at 17.28.46 1 WhatsApp Image 2025 01 31 at 17.28.46 WhatsApp Image 2025 01 31 at 17.28.22 WhatsApp Image 2025 01 31 at 17.28.08

WhatsApp Image 2025 01 31 at 17.26.40 WhatsApp Image 2025 01 31 at 17.26.39 WhatsApp Image 2025 01 31 at 17.27.36 WhatsApp Image 2025 01 31 at 17.27.39

WhatsApp Image 2025 01 31 at 17.28.02 WhatsApp Image 2025 01 31 at 17.28.11 WhatsApp Image 2025 01 31 at 17.28.13 WhatsApp Image 2025 01 31 at 17.28.42