WhatsApp Image 2025 02 04 at 10.32.06

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்களின் தலைமையில் 04.02.2025 அன்று மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை இடம்பெற்றதுடன் பயன் தரு பழக்கன்றுகள் பதவிநிலை உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் நடப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கு மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதம கணக்காளர். பிரதம பொறியியலாளர், உதவி மாவட்ட செயலாளர்,  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், உயர் அதிகாரிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலி அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 02 04 at 10.32.07 WhatsApp Image 2025 02 04 at 10.32.06 1 WhatsApp Image 2025 02 04 at 10.32.05 WhatsApp Image 2025 02 04 at 10.32.03

WhatsApp Image 2025 02 04 at 10.31.56 WhatsApp Image 2025 02 04 at 10.31.59 1 WhatsApp Image 2025 02 04 at 10.31.59 WhatsApp Image 2025 02 04 at 10.31.58

WhatsApp Image 2025 02 04 at 10.31.54 WhatsApp Image 2025 02 04 at 10.31.53 1 WhatsApp Image 2025 02 04 at 10.31.53 WhatsApp Image 2025 02 04 at 10.31.45

WhatsApp Image 2025 02 04 at 10.31.46 WhatsApp Image 2025 02 04 at 10.31.49 WhatsApp Image 2025 02 04 at 10.30.23 WhatsApp Image 2025 02 04 at 10.31.43 1

WhatsApp Image 2025 02 04 at 10.31.43