WhatsApp Image 2025 02 07 at 11.53.57

சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  உதவி மாவட்ட செயலாளர்  ஜி பிரணவன் அவர்களின் ஏற்பாட்டின்  கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச கோணேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.02.2025 அன்று நடைபெற்றது.

இதன்போது கடந்த வருடம்  மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம்  மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,  நடப்பு வருடத்திற்கான செயற்றிட்டங்கள், மாற்றுத் திறனாளி அமைப்புக்களின் செயற்பாடுகள் மாற்று திறனாளிகளை வலுவூட்டி தொழில் வாய்ப்பை வழங்கல், இவ்வருட தடகள  விளையாட்டுப் போட்டிகள்  தொடர்பான கலந்துரையாடல்  இடம்பெற்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைத்தல்  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ஏ.அருள்ராஜ், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றத்திறனாளி அமைப்புக்களின் தலைவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 02 07 at 11.53.56 WhatsApp Image 2025 02 07 at 11.53.57 1 WhatsApp Image 2025 02 07 at 11.53.58 WhatsApp Image 2025 02 07 at 11.53.58 1