
புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்படை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களை மாவட்ட செயலணியினர் மேற்பார்வையில் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐந்தாண்டு வேலைத்திட்டம் தொடர்பான விரிவான தெளிவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டன.
வளமான நாடு அழகான தேசம் எனும் தொனிப்பொருளை அடைவதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றினைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






