WhatsApp Image 2025 04 21 at 17.02.18

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில்  கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.04.2025 அன்று இடம்பெற்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. முதற்கட்டமாக எதிர்வரும் 24.04.2025,25.04.2025  திகதிகளில்  தபால் மூல வாக்களிப்புக்களும்  இறுதிக்கட்ட தபால் மூல வாக்களிப்பு தினங்களாக  28.04.2025,29.04.2025 திகதிகளில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 04 21 at 17.02.18 WhatsApp Image 2025 04 21 at 17.02.19 WhatsApp Image 2025 04 21 at 17.02.20 WhatsApp Image 2025 04 21 at 17.02.26

WhatsApp Image 2025 04 21 at 17.02.20 1 WhatsApp Image 2025 04 21 at 17.02.23 WhatsApp Image 2025 04 21 at 17.02.24 WhatsApp Image 2025 04 21 at 17.02.25