
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.04.2025 அன்று இடம்பெற்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







