WhatsApp Image 2025 05 22 at 10.22.08

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.05.2025 அன்று இடம்பெற்றது.

மாவட்டத்தில் விவசாயம், கால்நடை, கிராமிய அபிவிருத்தி மற்றும் பசளை வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விவசாயப்பணிப்பாளரினால் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டன. மேலும் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்ட விடயங்கள்  தொடர்பாக அளிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வின்  விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் சி. தனிநாயகம், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2025 05 22 at 10.22.08 WhatsApp Image 2025 05 22 at 10.22.07 2 WhatsApp Image 2025 05 22 at 10.22.07 1 WhatsApp Image 2025 05 22 at 10.22.07

WhatsApp Image 2025 05 22 at 10.22.06 1 WhatsApp Image 2025 05 22 at 10.22.06 WhatsApp Image 2025 05 22 at 10.22.04