
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெற்றோர்களின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோகரி விழிப்புணர்வு செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாட்ட செயலகத்தில் 13.06.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோகரி விழிப்புணர்வு செயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் சிந்தித்து தீர்த்து வைப்பதற்கும் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமாக இக்கற்கை நெறி அமைந்திருந்தது. இதன்போது சுய ஒழுக்கம், சுய வழிகாட்டுதல், சுய கண்காணிப்பு, உண்மைத் தன்மையை அறிதல் மற்றும் இவ்வாறான பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டது. தனிநபர் குடும்பம் சமூகம் என்பவற்றிற்கு தேவையாக கருதப்படும் விடயதானங்கள் தொடர்பான விழிப்புட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டன. இச்செயலமர்வில் ஓய்வு பெற்று பிரதிக்கல்வி பணிப்பாளர் என்.தயானந்தன், வடமாகான மாகாண உளசமூக வளநிலையத்தின் ஓய்வு நிலை உதவி முகாமையாளர் செல்வி சிவபாதசுந்தரம் உதயகலா ஆகியோரினால் வளவாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.








