WhatsApp Image 2025 06 15 at 10.23.48

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில்  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட சேவையினை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வும் சமாதான நீதிவான்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வும் 14.06.2025 அன்று மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக இடம்பெற்றபோதே மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய "சாமஸ்ரீ தேசமான்ய"  உ.உதயகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன்   அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்,  குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாகவும் வளவாளர்களாகவும்  சட்டத்தரணியும்  சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முன்னாள் உப தலைவரும் வளவாளருமாகிய அ.அன்பழகன் குருஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரும், வளவாளருமான சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் ஆகிய இருவரும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

அதிதிகள் வரவேற்பு இடம்பெற்று அமைப்பின் கொடி ஏற்றப்பட்டு. உறுதியுரையுடன் மண்டப நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு அமைப்பின் கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மௌன இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்று "சமாதான நீதிவான்களின் செயற்பாடுகள்" தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு, இணைப்பாளர்களுக்கான நியமனப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை என்பன பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டு, பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து அமைப்பின் செயலாளர் தேசகீர்த்தி, சமூகஜோதி ரீ.லெட்சுமிகாந்தன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" எம்.வை.ஆதம், பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" சபாரெத்தினம் சுதர்சன், உபசெயலாளர் கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன் நிருவாக சபை உறுப்பினர்களான திருமதி.இ.கோமலேஸ்வரி, கே.சதீஸ்க்குமார், கே.நடேசன், திருமதி.கே.தவப்பிரகாஷ், எம்.பகீரதன், எம்.எஸ்.எம்.நசீர், ஈ.சீதாராமன், அகமட் சின்னலெவ்வை, என்.நவதாசன் மற்றும் அமைப்பின் கணக்காய்வாளர்களான ஏ.தவராஜா,  சிவசுப்பிரமணியம் சிவானந்தன் உள்ளிட்டோரும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டு குறித்த நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

WhatsApp Image 2025 06 15 at 10.24.44 WhatsApp Image 2025 06 15 at 10.24.43 1 WhatsApp Image 2025 06 15 at 10.23.48 WhatsApp Image 2025 06 15 at 10.23.48 1

WhatsApp Image 2025 06 15 at 10.23.49 WhatsApp Image 2025 06 15 at 10.23.50 1 WhatsApp Image 2025 06 15 at 10.23.51 WhatsApp Image 2025 06 15 at 10.23.53

WhatsApp Image 2025 06 15 at 10.23.55 WhatsApp Image 2025 06 15 at 10.24.43