
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் முன்வைக்கப்பட்ட பொதுமக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், பொதுமக்கள் தினம் இன்று (08) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி ஜே. ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இங்கு, பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆளுநரிடமும் பிரச்சினைகளை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டது.







