
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை 11.07.2025 அன்று வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கேற்றதுடன், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இந்நேரத்தில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர்இ இன-மத பேதமின்றி தேசிய ரீதியில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இப்பிரதேச வீரர்களின் திறமைகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கே. பற்றிபோல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






