
49வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி) அவர்களின் தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் 12.07.2025 அன்று ஆரம்பமாகியது. மாவட்டத்தில் உள்ள வீரர்களின் திறமைகளை வெளிக்காட்டும் அரங்காக இப்போட்டிகள் காணப்பட்டன. எதிர்வரும் 49வது தேசிய விளையாட்டு விழா கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டவுள்ளனர்.
ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், பரிதி வட்ட எறிதல் போன்ற பல போட்டிகள் இந்நிகழ்வின் போது இடம்பெற்றதுடன், போட்டியில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஐஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்ஜெயன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார்.






