
பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் புதிய மாவட்ட செயலகத்தில் 27.01.2026 ம் திகதிவழங்கி வைத்தார்.
ரெசிலின்ஸ் நிறுவனத்தில் (Resilience) நிதி ஒதுக்கீட்டில் அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான செயலமர்வானது தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என 29 அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
இச்செயலமர்வின் போது பாதுகாப்பான புலம் பெயர்வு மற்றும் அரச அதிகாரிகளுக்கு மனித ஆட்கடத்தல் பற்றிய விழிப்பூட்டல் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான உபாய முறைகள் மற்று இலக்கு குழுக்களை கையால்வதற்கான முறைமைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், அம்கோர் நிறுவன பணிப்பாளர் ப.முரளிதரன், அம்கோர் நிறுவன நிதிப் பணிப்பாளர் துமிந்த பெரேரா, அம்கோர் நிறுவன சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எஸ்.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இச் செயலமர்வின் போது சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






