
மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு பொது நூலகமும் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் 29.01.2026 ம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
"மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் மாணவர்களை வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இடம் பெற்ற நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான விவாதப்போட்டி, திறந்த மட்ட ஒரங்க நாடகப்போட்டி, பேச்சுப்போட்டி, சிறந்த நூலகங்களுக்கான போட்டி, தமிழ், சிங்கள, ஆங்கில மொழி வாசிப்பு போட்டி, கதை உருவாக்கப்டோட்டி, சித்திரப் போட்டி, கணித போட்டி , பொது அறிவுப் போட்டி என பல போட்டிகள் இடம் பெற்றதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் சிறந்த வாசகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தேசிய ரீதியில் 24 மாநகர சபைகளுக்கு இடையில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர சபையானது இரண்டாம் இடம் பெற்றுக் கொண்டதுடன், இவ்வருடத்தினுல் புதிய நூலகத்தினை மக்கள் பாவனைக்கு வழங்கு முடியும் என்றார்.
இந் நிகழ்வில் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், நூலகக்குழுத் தலைவர் துரைசிங்கம் மதன், மாநகர சபை உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், திருமதி.எம்.ஆர் பாத்தீமா றிப்கா, மாநகர பிரதி ஆணையாளர் வி.தேவநேசன், மாநகர பிரதம கணக்காளர் கே. அரசரெட்ணம், பொறியியலாளர் நடராஜா கதீசன், இந்த கால் நடை வைத்திய அதிகாரி எஸ்.துஷ்யந்தன் உயர் அதிகாரிகள், மாநகர உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் இதன் போது வெற்றி பெற்ற மாணவர்களினால் சிந்தனைக்கு விருந்தாகும் பேச்சுக்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





