1மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கான வீட்டு திட்ட காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (06.07.2026) இடம் பெற்றது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்  அவர்கள் கலந்து கொண்டு வீட்டு திட்டத்திற்கான 1 லட்சம் ரூபா காசோலைகளை வழங்கி வைத்தனர்.

"சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை" எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடு அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நான்காவது கட்ட காசோலைகள் இன்று வழங்கி வைக்கட்டது.

மட்டக்களப்பு மாட்டத்தில்  தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்    நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளுக்கு ஐந்து கட்டமாக   நிதிக் கொடுப்பணவுகள் வழங்கப்படவுள்ளதுடன்  எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் மாவட்டத்தில் அனைத்து வீட்டுத்திட்டங்களையும் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பித்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் நாட்டில் சுபிட்சமான அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வருடம் மாவட்டத்தின் இத் திட்டத்தின் கீழ் 445 வீடுகள் மற்றும் 2015 மற்றும் 2019 ஆண்டு இடை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்ட 133 வீடுகளுக்குமான நிதியினை தேசிய வீடமைப்பு அதிகார சபையினர்  வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில்தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர், தேசிய வீடு அமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள்,  பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1 2 4