
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலை தொடர்பான ஊடகவியாளர் சந்திப்பொன்றினை 02.12.2018 மாலை 4.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது அலுவலக கேட்போர் கூடத்தில் நடத்தினார்.
மாவட்டத்தில் இதுவரை வெள்ள பாதிப்புள்ளாகிய ஏழு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்தும் பாதிப்புள்ளாகியும் உள்ளனர். மொத்தத்திலே 32 கிராம சேவகர் பிரிவுகளில் 1,297 குடும்பங்களில் இருந்து 4,612 நபர்கள் பாதிக்கப்பட்டு 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
தற்போது 3 முகாம்களில் இருந்தவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி இருப்பதாகவும் தற்போது 2 நலன்புரி முகாம்களில் மட்டும் 53 குடும்பங்களை சேர்ந்த 196 நபர்கள் மாத்திரம் தங்கியுள்ளனர். இதே போன்று உறவினர்களினுடையே வீடுகளில் 1,130 குடும்பங்களை சார்ந்த 4,009 பேர் தங்கியுள்ளனர்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 528,300 ரூபாய் முற்பணம் வழங்குவதற்காக முன்னாயித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நலன்புரி நிலையங்கள் ,உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் 1,292 குடும்பங்களை சேர்ந்த 4,596 நபர்களுக்காக உலர் உணவு ஒரு வாரத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென 2,325,600 ரூபாய் முற்பணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரான் பாலத்தில் பயணிக்கும் மக்களுக்கு மூன்று இயந்திரப்படகுகள் வழங்கப்பட்டு மக்களின் சுமுகமான பணிக்கும் சாதாரணதர மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவதற்காகப் போக்குவரத்து வசதிகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக கடந்த மாதம் 2019.11.22 வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் கருவாக்கேனி பிரதேசத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் ஒரு நபர் மரணம் அடைந்தார். இவருக்கான மரணச்செலவு கொடுப்பனவுக்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இவ்வனர்த்தத்தின் மூலம் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திற்கு இவ்வருடம் கிடைக்க வேண்டிய மொத்த மழைவீழ்ச்சியாக 1650.9 மில்லிமீற்றர் மழை கிடைக்க வேண்டியுள்ளது. தற்போது கடந்த மாதம் முதல் இதுவரை 1,688.20 மில்லிமீற்றர் மழை இதுவரை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி அதிகளவில் பதிவாகியுள்ளது என்பது என மேலும் தமது தகவலில் குறிப்பிட்டார்.





