சுவிஸ் உதயம் நிறுவனத்தினால் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் 12-12-2019 அன்று நடைபெற்றது.
கிரான் பிரதேச செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டன.
கிரான் முதியோர் சங்க கட்டிடத்தில் பிரதேச சபை உறுப்பினர் க.பகிரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் நிறுவனத்தின் செயலாளர் ரீ.ஜெயகுமார் ,சமூகசேவையார் ரீ.தங்கவேல், ஊடகவியலாளர் ஆர்.சயநொளிபவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







