DSC 0936 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதுறு ஆறு பெருக்கெடுத்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர்  மீட்புப்பணிக்காக சென்று கொண்டிருந்த போது மாவடியோடை பாலத்தை நீர் பெருக்கெடுத்ததையடுத்து இயந்திரப்படகினை உழவு இயந்திரம் மூலமாக ஏற்றி சென்ற வேளையில் குறித்த மாவடியோடை ஊடாக பெருக்கெடுத்த நீரில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து அதில் பயணம் செய்த தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் நீரில் முழ்கி அதிஸ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் நீரில் மூழ்கிய தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உத்தியோகத்தர் மொகமட் ஹசிர் ஆரம்ப சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். தற்போது அவரின் உடல்நிலை தேறிவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.