மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் நீர்தேக்கங்கள், குளங்கள் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உன்னிச்சை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கரவெட்டியாறு கிராமத்தை சார்ந்த 58 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப்பொருட்களை 23.12.2019 அன்று அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் வழங்கி வைத்தார்.
இதன் போது பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகரன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம்.சியாத் கியுமெடிக்கா நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.என்.நல்லசிங்கம் மற்றும் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கரவெட்டியாறு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள அனர்த்தத்தால் முற்றும் நீரினால் சூழப்பட்ட நிலையில் தங்களின் தேவைக்காக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததை அவதானித்ததை தொடர்ந்து இம்மக்களுக்கு நிவாரணம் பொருட்களை விரைவாக வழங்குவதற்காக அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















