DSC 0104 resizedஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் மூழ்கிய கொம்மாதுரை கிராமத்திற்குட்பட்ட தீவுப்பகுதியில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்களை கொம்மாதுரை அரசின் கலவன் பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் 23.12.2019 வழங்கி வைக்கப்பட்டது.

ஜேர்மன் நாட்டு மனிதாபிமான நிதி உதவி திட்டத்தில் இயங்கும் கியுமெடிக்கா நிறுவனத்தின் அனுசரனையில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளில் ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் இத்தீவு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூர்ப்பற்று செயலாளர் திரு. ந.வில்வரட்ணம் ,மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம் சியாத் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

DSC 0091 resizedDSC 0092 resizedDSC 0099 resizedDSC 0104 resizedDSC 0110 resizedDSC 0112 resizedDSC 0124 resizedDSC 0130 resized