DSC 0835 resized

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை  பாராட்டி கௌரவிப்பும் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வும் பொதுச்சபை கூட்டமும் 29.12.2019 அன்று ஸ்ரீ மாமங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க  மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு உதயராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு சங்கத்தின் உபதலைவர் திரு சிவலிங்கம் கனகசபை, செயலாளர் நிலோஜினி , மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கே.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களாகிய அனுக்கிரகா அனுசீலன் 177 புள்ளிகள் ,  சிவபிரிந்தன் ரிஷோபன் 168 புள்ளிகள்,  செந்தில்நாதன் தஷ்விந் 159 புள்ளிகளை பெற்ற மாணவர்களை  பாராட்டி கௌரவிப்பும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

DSC 0827 resized DSC 0831 resized DSC 0835 resizedDSC 0838 resized DSC 0839 resized DSC 0856 resized DSC 0862 resized DSC 0884 resized DSC 0886 resized DSC 0890 resized DSC 0900 resized DSC 0910 resized DSC 0927 resized