IMG 4920 resizedஉள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் 20.01.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2003 தொடக்கம் 2020 ஆண்டு காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவுகளில் சுற்றுலாத்துறையுடன், சிறுகைத்தொழில், கலை கலாச்சாரங்கள்
போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று கடந்த 6 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக மாவட்டத்தின் 14 பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு தெளிவு படுத்தி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .புண்ணியமூர்த்தி சசிகலா தலைமையில் 20.01.2020 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் திரு.எ.நவேஸ்வரன் , 14 பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

IMG 4909 resized IMG 4912 resized IMG 4915 resized IMG 4916 resized