மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மாவட்ட ரீதியில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் 2020 ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள செயல் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தல் இன்று 21.01.2020 அன்று நடைபெற்றது.
இதன் போது 2019 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள், அடைந்த அடைவு மட்டங்கள், 2020 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாட்டு திட்டங்களை தயாரிப்பது சம்பந்தமாகவும் மாவட்ட மட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் சிறுவர் மகளிர் சம்பந்தமாக காணப்படுகின்ற விடயங்கள், பிரதேச ரீதியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமான விடயங்கள் 2020இல் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாவட்ட மட்டத்தில் சகல ஒருங்கிணைந்த நிறுவனங்கள் துறை ரீதியாக கல்வித்திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மாகாணசபை உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள், நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.






