
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களின் வருடாந்த கூட்டமும் நிர்வாக தெரிவும் 24.01.2020 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் மூலம் அழகு கலை நிபுணர்களை பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் இரண்டு வருட காலமாக செயற்பட்டு இயங்கி வந்த அமைப்பானது தற்போது விளையாட்டு மற்றும் கல்வி சிறு தொழில் முயற்சி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை அமைப்பின் வருடாந்த கூட்டமும், புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவும், புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு மேற்பார்வை அதிகாரி தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வருடாந்த கூட்டம், மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவு நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கும் அழகுக்கலை நிபுணர்கள் அதேபோல அழகுக்கலை துறையோடு தொடர்புடைய இளைஞர் யுவதிகள் , மாவட்ட பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







