IMG 4736 resizedமட்டக்களப்பு தொழில்நுட்பக்க கல்லூரி மாணவர்களின் தொழில் பயிற்சிக்காக மோட்டார் சைக்கிள்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.உதயகுமார் அவர்கள் 24.01.2020 அன்று வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் பயிற்சி நெறியினை பயிலும் மாணவர்களில் மோட்டார் சைக்கிள் திருத்தும் இயந்திர பழுதுபார்த்தல் பாடநெறியினை பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப கற்கை நெறியினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலகத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பதிவாளரான திரு.கே.மதிவண்ணனிடம் மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கும் நிகழ்வு 24.01.2020 மாலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

IMG 4739 resized IMG 4741 resized IMG 4736 resized IMG 4747 resized