IMG 4820 resizedமட்டக்களப்பு மாவட்ட கலாசார கூடம் மாவட்ட அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலகத்தில் 24.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொன்மையை பிரதிபலிக்கும் பழைமை வாய்ந்த கலை கலாசாரம் மற்றும் வரலாற்றை பிரதி பலிக்கும் பொருட்களின் கலாசார காட்சி கூடம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டிட பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு மாவட்ட இளம் சமூகத்தினருக்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பினை தெரியப்படுத்தும் வகையில் வரலாற்றினை அறியத்தரும் பொருட்களை காட்ச்சிப்படுத்தும் கலாசார கூடமாக திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு எ . நவேஸ்வரன் , மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

IMG 4815 resized IMG 4817 resized IMG 4820 resized IMG 4822 resized

IMG 4825 resized IMG 4834 resized IMG 4836 resized IMG 4847 resized