2019 - 2020 பெரும்போக வேளாண்மை அறுவடை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுடைய நெற்களை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கடந்த 24.01.2020 அன்று நடைபெற்றது.
இதன் போது ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற உள்ள கலந்துரையாடல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நெல்லை கொள்வனவு செய்யும் களஞ்சிய சாலை உரிமையாளர்கள், அரிசி ஆலை முகாமையாளர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நெல்லை கொள்வனவு செய்து அவற்றினை பாதுகாப்பது வைத்திருப்பதற்காக வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பாகம் அவற்றினுடைய வட்டிவீதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் அரிசி ஆலை முகாமையாளர்கள் அவர்களால் கொள்வனவு செய்யப்படக்கூடிய நெல்லின் அளவு சம்பந்தமாகவும் அதேபோல அவர்கள் இம் மாவட்டத்தில் இக் காலகட்டத்தில் நெல் விலையை எவ்வள வாக தீர்மானிக்கின்றனர், அவர்கள் களஞ்சியத்தில் வைத்திருக்கக்கூடிய நெல்லின் அளவு என்பது தொடர்பான விபரங்கள் அவர்களுடன்
கலந்துரையாடப்பட்டு பெறப்பட்டது.
எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொள்வதற்கான அரசு திட்டம் ஒன்றினை அனுமதிக்கப்படும் என எதிர்பார்த்து அவற்றுக்குத் தேவையான தரவுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசாங்க அரசாங்க அதிபர் தெரிவித்தார்.






