DSC 0252 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான சிற்றுண்டி நிலைய திறப்பு விழா 24.01.2020 அன்று மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் திருமாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மு.ப 11.00 மணியளவில் இடம்பெற்றது.

மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள், சேவை நாடிகள், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலாச்சார பூர்வமாக எமது மண்ணின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கான சிற்றுண்டி நிலையமானது மாவட்ட செயலக வளாகத்தினுள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, கணக்காளர்களான திரு.கே.பிரேம்குமார், திரு எம்.பசீர், உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி.இந்திரா மோகன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

DSC 0245 resized DSC 0249 resized DSC 0252 resized DSC 0253 resized

DSC 0255 resized DSC 0262 resized DSC 0264 resized DSC 0269 resized

DSC 0277 resized