இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தினத்தினை 04.02.2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பேன்ட் வாத்திய அணி வகுப்பும் முப்படைகளின் அணி நடைகளும் நடை பெற்று இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு நான்கு மதங்களை பிரதிபலிக்கின்ற மதகுருமாரின் ஆசி வழங்குதலுடன் இந் நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந் நிகழ்வில் விமானப் படையின் இணைப்பதிகாரி திரு.ஆர்.எம்.என்.எல்.ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்ப மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூப ரஞ்சினி முகுந்தன், மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணிய மூர்த்தி, கணக்காளர் திரு.பிரேம் குமார் ஆகிய உயர் அதிகாரிகளும், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் "ஒற்றுமையான செழிப்பு மிகுந்த நாட்டினை கட்டியெழுப்புவோம்" எனும் கருப் பொருளிலே இச் சுதந்திர தினம் அமையப்பெற்றுள்ளது. சமாதானம் என்பது தனி நாட்டுக்கு மாத்திரம் அல்ல ஒவ்வொரு தனி மனிதனும் சுதந்நிரமாக வாழ்வதுடன் ஏனைய சமூகப் பிரசைகளையும் சுதந்நிரமாக வாழ்வதற்கு வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். அதனோடு செழிப்பாக நாடு எனும் தொனிப் பொருள் நாட்டை இயற்கை மரங்களினால் செழிப்படைய செய்து மக்களின் வாழ்க்கையின் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி இந் நாட்டு மக்கள் அனைவரும் சுபீடசமும் சுகவாழ்வுடனும் வாழ்வதற்கு அனைவரும் இவ்விடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

















