DSC 1022 reமட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று 18.02.2020 காலை 9.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விவசாயக்குழு கூட்டத்தினை மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.வை.வீ.இக்பாலின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் ஆராயப்பட்டது. விவசாயிகளின் பிரச்சனைகளைத்தொடர்ந்து ஆராய்கையில் இம்முறை நெல் கொள்வனவில் இடம் பெற்ற அசௌகரியங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தியதுடன் எதிர் காலங்களில் அறுவடை செய்யப்படுகின்ற நெற்களை உலர்த்துவதற்கு களஞ்சிய வசதியினை ஏற்படுத்தி தருகின்ற சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு இது நன்மை பெறுகின்ற செயலாக அமைகின்றது எனவும் குறிப்பாக வாகரைப் பிரதேச கட்டுமுறிவுப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்குச்செல்வதற்காக பாதைகளை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைகளுக்கமைவாக விவசாயிகளின் நெற்களை நியாய விலைகளில் விலைத்தாக்கமின்றி கொள்வனவு செய்ய எடுத்த நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்ற செயலாக இருந்தமையினை விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் இக் கூட்டத்தில் விழித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் விவசாய குழுக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஜகனாத், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், வங்கிகளின் முகாமையாளர்கள், விவசாயத் துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DSC 1000 reDSC 1003 reDSC 1005 reDSC 1007 reDSC 1009 reDSC 1015 reDSC 1022 reDSC 1029 reDSC 1032 re