DSC 1285மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 25.02.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான இந்த இணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அமீர் அலி, எஸ்.யோகேஸ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகான சபையின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் உள்ளுர் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதகள் பெருமளவில் பங்கு கொண்டனர்.

இந்த மாவட்ட அபிவிருத்தி இணைப்பபுக் குழுக் கூட்டத்தில் இவ்வருடம் கொள்கை திட்டமிடல் அமைச்சினால் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அங்கீகரிக்கப்பட்ட 822 திட்டங்களுக்கான சுமார் 1,040 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பற்றிய முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் பற்றிய சவால்களும் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் இன்றய கூட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வருடத்தின் அபிவிருத்திக்காக இம்மாவட்டத்தில் புதிய அரசின் சப்பிரிகமக் மக்கள் பங்களிப்பூடான கிராம அபிவிருத்தி 528 திட்டங்களுக்கு 690 மில்லியன் ரூபாவும், புதிய தொழினுட்ப முறையிலான கொங்ரீட் பெனல் நிரந்தர வீடுகள் 250 முதலாம் கட்டமாக அமைக்க 320 மில்லியன் ரூபாவும், உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வேலைத்திட்டத்தின் கீழ் 18 வீடுகளை அமைக்க சுமார் 11 மில்லியன் ரூபாவும், கிராமிய அடிப்படை வசதி திட்டங்களுக்கு 26 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தவிர மாவட்ட செயலகத்தினூடாக அமுல்ப்படுத்தப்படும் 5,795 திட்டங்களுக்கு 3,210 மில்லியன் ரூபாவும், மத்திய அரசாங்க அமைச்சுகளினூடாக 143 திட்டங்களுக்கு 2,670 மில்லியன் ரூபாவும், விசேட திட்டங்களுக்காக 2,630 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகான சபை நிதி ஒதுக்கீட்டில் 431 திட்டங்களுக்கு 982 மில்லியன் ரூபாவும், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புகள் ஊடாக 198 திட்டங்களுக்கு 859 மில்லியன் ரூபாவும், ஐரோப்பிய யூனியன் வீடமைப்புத்திட்டம் 581 இற்கு 438 மில்லியன் ரூபாவும் மொத்தத் திட்டங்களாக 7,209 திட்டங்களுக்கு 10,791 மில்லியன் ரூபாவும் கடந்த வருடம் நிதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இந்த நிதி ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட திட்டமிடல் பிரிவு தெரிவிக்கின்றது.

இம்மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கால்நடை அபிவருத்தி, கல்வி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, கலாசாரம், விளையாட்டு உட்பட பல்வேறு அடிப்படை வசதித் திட்டங்களுக்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

DSC 1247DSC 1253DSC 1250DSC 1255DSC 1258DSC 1285DSC 1301DSC 1290DSC 1289