DSC 9852 resized

மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் கனிஸ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டத்தினை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜக்கியத்தினையும் நல்லுறவினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதிய வகுப்பறை கட்டடத்தினை பிரதம அதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைத்தார். இன, மொழி, மத, சாதி வேறுபாடுகள் அற்ற சிறந்த சமூகத்தினை கட்டி எமுப்புகின்ற நல்லெண்ணத்துடன் மாணவர்கள் வாழப் பழகவேண்டும் எனவும் நாட்டை சுபிட்சம் நிறைந்த நாடாக மாற்றிமைக்கும் சிறந்த மாணவர்களாக மாறவேண்டும் எனவும் எதிர்காத்தின் தலைவர்களாகவுள்ளவர்களும் நீங்கள் தான் எனவும் கூறினார்.


இந்நிகழ்வானது திரு.த.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் திரு.வெ.தவராசா மற்றும் சிறப்பு அதிதியாக வலயக்கல்விபணிப்பாளர் திரு.தி.ரவி மற்றும் மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.  

DSC 9837 resized DSC 9845 resized DSC 9786 resized DSC 9808 resized